நேரம் கிடைத்த பொழுதெல்லாம் நினைவில் நீந்தியவை

  • செற்றம்

    செற்றம்

    குற்றமே கண்டினுஞ் செற்றமுற் றுற்றவர்பற்றுளங் கொன்றதுச் சிற்றுறச் செய்திடுங்கூற்றவர் கொள்வலி முற்றுமே கூறிடும் பெற்றசுற்றம் வற்ற விடும் #வெண்பா #தமிழ்ப்பா செற்றம் – சினம், சிற்று – கலக்கம், கூறிடும் – கூறு போடும்

  • மட்பாண்ட தமிழ்நாடு

    மட்பாண்ட தமிழ்நாடு

    மண்ணாண்ட மன்னர்தம் முள்ளுரைத்த தேற்றுரைக்குங்கல்லேடுஞ் செப்பேடுங் காணாத தொல்காட்டில்மண்ணார்ந்த மண்ணர்கள் மெய்யுரைத்த கீறல்கொள்மட்பாண்டங் கண்டதமிழ் நாடு! #வெண்பா #தமிழ்ப்பா #தமிழ்நாடு

  • தோற்பு

    தோற்பு

    செவியிலை யேனும் செதிலால் உணர்ந்துசெவியிலி நாளும் புவியிலே வாழும்உறுப்பிலை யேனும் உனக்கிலை தோற்புஉயிரிலி யாகும் வரை #வெண்பா #தமிழ்ப்பா தோற்பு – தோல்வி, செவியிலி – பாம்பு

  • சிமிழ்த்தாத கண்

    சிமிழ்த்தாத கண்

    சுழியனைப் போலேச் சுறுசுறுப் பின்றிச்சிலையாய் நகர்கிற தென்றே நினைத்தேன்செவியனைப் போல்கண் ணிமைக்கும் நொடியிலேச்சிட்டாய்ப் பறந்தபல் லாண்டுகள் கண்டுசிமிழ்த்தாது நின்றதென் கண் #வெண்பா #தமிழ்ப்பா சுழியன் – நத்தை, செவியன் – முயல், சிமிழ்த்தல் – இமைத்தல்

  • ஒன்று தமிழ்நாடு

    ஒன்று தமிழ்நாடு

    சேரநாடும் சோணாடும் பாண்டிநாடும் பண்ணாடுஅண்டையாண்ட பல்நாடும் அண்டவஞ்ச மல்நாடுஒற்றுமைக்கு ஒவ்வாது ஊராண்டோர் ஊடலுற்றும்தாய்மொழியால் ஒன்றுதமிழ் நாடு #வெண்பா #தமிழ்ப்பா #தமிழ்நாடு பண்ணாடு – பண்ணிய நாடு, மல்நாடு – போர் புரியும் நாடு

  • நெட்டைப்புதல்

    நெட்டைப்புதல்

    காட்டைக் கடித்தெடுத்து நாட்டில் வடித்தெடுத்தகட்டைப் பொருளருளும் நெட்டைப் புதல்மறவோம்கோடைப் பருவகாலம் சோடை வருவதீயுங்கேட்டைப் பொறுத்துவாழச் சோட்டை யிருப்பதுண்டோ?காட்டில் பொருந்தவாழும் நாடு #வெண்பா #தமிழ்ப்பாசோடை – வறட்சி, சோட்டை – விருப்பம்,நெட்டைப்புதல் – மரம்

  • சோனைப் போர்

    சோனைப் போர்

    யானைப் படைபகல் வானை மறைத்திடத்தானை படையொலி ஊனைச் சிலிர்த்திடமண்ணில் குருதியாய் விண்துளி சிந்திடத்சோனை யெனநிகழ் போர் #வெண்பா #தமிழ்ப்பா

  • அட்டை அடர்கோள்

    அட்டை அடர்கோள்

    சிறிது சிறிதாகச் செந்நீர் உறிஞ்சிதனைஓம்பும் ஒருவருக்கே ஓயாது தீங்கிழைத்துச்சாய்த்துச் சினைவளர்த்துச் சாலப் பெருகிடும்அட்டை அடர்கோள் அழுகிறதோ செம்மி?சிரிக்காது சிந்துஞ் சொரிவு #வெண்பா #தமிழ்ப்பா #புவி

  • வட்டை நடையெட்டும்

    வட்டை நடையெட்டும்

    தட்டம் இடுவட்டை விட்டு விடத்திட்டம்சட்டை பொடிகோட்டம் ஒட்டைப் புடைகாட்டும்பட்டம் பிடிகூட்டம் முட்டும் அடிமட்டம்வட்டை நடையெட்டும் காண் #வெண்பா #தமிழ்ப்பா

  • தொலையும் நீர்

    தொலையும் நீர்

    தலைப்பெயல் தந்து திரள்புனல் தோன்றிடத்தங்கிடம் தாக்குமோ தேங்குநீ ரென்றுதலைமடை தேடித் திறந்துநீர் தீர்த்துத்தலைதொடும் தண்ணீர் தொலைத்தவர் பின்புதொலைவினில் தேடுவ தேன்? #வெண்பா #தமிழ்ப்பா

Got any book recommendations?