ஓடிப்பழகு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா
ஓட்டமே உயிர்காக்க உதவிடும் பாப்பா!
கூடி விளையாடு பாப்பா
கூட்டமே கயவரடி குலைத்திடும் பாப்பா!

Advertisements

தலைவன்

குறுக்கிடு மார்த்தடை குத்திடும் வேளை
புறக்கிடு வார்தலை யில்

#குறள்வெண்பா

விளக்கம்: தடை கண்டு தயங்கி புறக்கிடுபவன் (பின்வாங்குபவன்) தலைவனல்ல

புளினம்

மணலாற்றின் போக்கைப் புதுக்குமாம் புளினம்
மனவாற்றல் புதுக்கும் இடர்

விளக்கம்: ஆற்றின் போக்கை மணல்திட்டு புதுப்பிப்பதைப் போல், இடர்கள் மனிதரின் திறனை புதுப்பிக்கின்றன

உழவன்

மட்டைச் சுழல புளகிக்கும் இனமே
வட்டை உழவ னுளம்பொக்கும் கனமே
ஒற்றைப் புளக முமுட்கொள்ள இலமே

#உழவன் #மட்டைப்பந்து

புழல்

வயல் நிறைந்து விழல் நனைந்ததன்று
புழல் நனைந்தும் புதல் நலிந்ததின்று
உழல் நிலையும் உகல் நாள்தானென்று?

ஆறு பறித்த மாநிலம்

ஆறுபறித்த மாநிலம்
ஆற்றுப்படுத்தா தாய்நிலம்
ஆர்பரிக்கும் மண்ணிலும்
ஆடத்துடிக்கும் தன்னலம்

#IndiaBetraysTamilnadu
#CauveryMangementBoard
#NoIPLTamilNadu

ஒற்றுமை

புலியிடத்து சிந்தை செறிவையும் வெல்லும்
புலிக்குடத்தி மந்தை அறிவு